news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் சர்ச்சையில் பார்த்திபன்
tv

Also Watch

மீண்டும் சர்ச்சையில் பார்த்திபன்

சாதி குறித்துப் பேசியதால் அதிர்ச்சி

51

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாதி குறித்து மேடையில் பேசி, மீண்டும் சர்ச்சையில், நடிகர் பார்த்திபன் சிக்கி உள்ளார்.

திரைப்பட விழா மேடையில்...
திரைப்பட விழா மேடையில், பார்த்திபன் பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் "உஸ்தாத் பகத் சிங்" எனும் படத்தில், பார்த்திபன் வில்லனாக நடித்து உள்ளார். பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், வரும் மார்ச் 19ஆம் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

நான் ஒரு...
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது;
என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால், தெலுங்கு தெரியாது.

அதனால், இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் கூடத் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன்.

அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறேன். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.
இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

மீண்டும் சர்ச்சையில்...
தமிழ்நாட்டில் தனது படங்களின் வசனங்கள், புத்தகங்களில் கவிதைகள் என்று, எதிலும் புதுமை, புரட்சி பேசுபவர் பார்த்திபன். சாதி மதங்களைக் கடந்து கலையை நேசிப்பவராக தன்னை தகவமைத்துக் கொண்டவர். தற்போது தன் சாதிய அடையாளங்கள் குறித்துப் பேசி இருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. நீண்ட காலமாக முற்போக்கு கருத்துக்களை பேசி வந்த பார்த்திபன், ஆந்திராவிற்குச் சென்று தன்னுடைய சாதிய அடையாளம் குறித்துப் பேசியிருப்பது வைரல் ஆகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில், பிரபல நடிகை குறித்து பார்த்திபன் பேசியிருந்ததும் சர்ச்சை ஆனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved