news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாணவியுடன் இணைந்து ‘களரி’ கலையை செய்து காட்டிய ராகுல் காந்தி
tv

Also Watch

tv

Read this

மாணவியுடன் இணைந்து ‘களரி’ கலையை செய்து காட்டிய ராகுல் காந்தி

கேரளம்

37

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குட்டிக்கானத்தில் உள்ள மரியன் கல்லூரியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களுடன் கலந்துரையாடிய போது கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரி (Kalari) செய்து காட்டினார்.

மாணவியை பார்த்து...
தினஸ்ரீ என்ற மாணவியின் அசைவுகளைப் பின்பற்றி, கால் நீட்டி உடலை வளைக்கும் சில அடிப்படை களரி நுட்பங்களை ராகுல்காந்தி முயற்சி செய்த வீடியோ, சமூக வலை தளங்களில், தற்போது வைரலாகி வருகிறது.

அனைத்து தற்காப்புக் கலைகளின் தாய்
கேரளத்தில், இடுக்கி மாவட்டம் குட்டிகானம் பகுதியில், மரியன் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, தற்காப்புக் கலை பயிலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ராகுல் காந்தி களரி அசைவுகளை செய்து காட்டினார். அவருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் டீன் குரியாகோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, களரியை "அனைத்து தற்காப்புக் கலைகளின் தாய்" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.


இதுகுறித்து மாணவி தினஸ்ரீ கூறும்போது, "ராகுல் வந்ததும், அவரிடம் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. தற்காப்புக் கலைகள் குறித்து கேட்டேன். அதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார். நான் செய்வதைப் பார்த்து, ராகுலும் சிறப்பாக செய்தார். அவர் தினமும் யோகா செய்து வருவதை அறிந்து கொண்டேன்" என்று கூறி உள்ளார்.

Related Link
35 வயதில் பிரதமர், இளம் வயதில் அசத்தல்

35 வயதில் பிரதமர், இளம் வயதில் அசத்தல்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 39 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved