Also Watch
Read this
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கரூரில் வைத்து சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.35 கோடி பேரம், அதிர்ச்சி
தமிழக சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது, அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுமாறு 35 கோடி ரூபாய் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது.

IDPS என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டதாக போலீஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு என்றும் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

செந்தில்பாலாஜிக்கு தொடர்பு
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பேரத்திற்கு உடன்படாததால் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.வுக்கு திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்துள்ளதாவும், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என திருநாவுக்கரசு மிரட்டியதாகவும் எம்.எல்.ஏ. புகார் அளித்து உள்ளார்.

பேரம் பேசியவர்கள் கைது
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக 3 பேரைக் கைது செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைதாகி உள்ளனர்.
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட இருவர் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன் பணம் வாங்கினார்களா?
சக்தி மெஸ் என்ற உணவகத்தை நடத்தி வரும் இருவரது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சிலர் பேரத்திற்கு படிந்து விட்டதாகவும் முன்பணத்தை வாங்குவதற்கு தயாராக இருந்ததாகவும் கூறப்படுவதால் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.