news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்
tv

Also Watch

tv

Read this

சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தவெகவில் இணைவதாக அறிவிப்பு

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து, கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளார்.

தவெகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இதுதொடர்பாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி இருப்பதாவது;
கடந்த 43 ஆண்டுகளாக, அரசியல் களத்தில் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொது நலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு சிரமங்களில் இருந்த போக்குவரத்து துறையை இரவு பகல் பாராமல் உழைத்து, நான் இருந்த ஐந்து ஆண்டு காலம் போக்குவரத்து துறையை பொற்காலமாக மாற்ற நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

மகிழ்ச்சி அடைகிறேன்
இதுமட்டும் அல்ல, கரூர் மாவட்டத்திலும் கொரோனா பெரும் தொற்றின் போதும், கரூர் மக்களின் இன்ப துன்பங்களிலும் நான் உடன் இருந்தவன் என்பது நீங்கள் அறிவீர்கள். நம் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்துவரும் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான  தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இணைப்பு விழா
இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வியாழக்கிழமை ஜூலை 2ஆம் தேதி காலை 9 மணி முதல், மகாபலிபுரம் தனியார் ஓட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

Related Link
கூட்டணியில் இருக்கும்போது ஏன் சொல்லவில்லை? கடுப்பில் பாய்ந்த வைகோ

கூட்டணியில் இருக்கும்போது ஏன் சொல்லவில்லை? கடுப்பில் பாய்ந்த வைகோ

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கவில்லை என தகவல்

0
7 mins agoshare
வைபவ் சூர்யவன்ஷி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau