news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சந்தானம் பேச்சு
tv

Also Watch

tv

Read this

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சந்தானம் பேச்சு

மெரினா, சென்னை

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Santhanam

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சந்தானம் பேச்சு :

நம்ம ஊரில் பேயை பார்த்து பயப்படுவதை விட AI பார்த்து பயப்படுவது தான் அதிகமாக இருக்கிறது.எனக்கு தெரிந்த ஒரு 90ஸ் கிட் நண்பர் மேட்ரிமோனி செயலில் போட்டோவை பார்த்து திருமணத்திற்கு பதிவு செய்து அவர்களுக்கு நிறைய பரிசுகள் கொடுத்து நிச்சயதார்த்தம் அளவிற்கு சென்று விட்டது.

அதன் பின்பு தான் தெரிந்தது அது AI செயலி மூலம் உருவாக்கப்பட்ட பெண் என்று. இதைதான் ரொமான்ஸ் scam என்று கூறுவார்கள் அதுமட்டுமல்ல முன்பெல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவார்கள் இப்பொழுது வீடியோ காலில் திருடுகிறார்கள்.அதை தான் டிஜிட்டல் அரெஸ்ட் என்று பயமுறுத்துகிறார்கள்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 64 பேரை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கூறுகிறார்கள் அதுபோல 300 கோடி மீட்டுள்ளாதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் சொன்னார்கள் இது போன்ற குற்றங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று. எங்கிருந்தோ ஒருத்தன் ஒரு போலி கணக்கை வைத்துக்கொண்டு நம்மை எளிதாக ஏமாற்றி விடுவார்கள்.

கிரைம் அதிகமாக நடப்பது நம் கையில் இருக்கும் போனில் தான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலியை வைத்து கொண்டு சும்மா இருப்பதில்லை எப்போது பார்த்தாலும் வாழக்கா பஜ்ஜி போடுவது போல ஸ்வைப் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இதுவே குற்றத்திற்கான முதல் காரணம்.

நம் போனில் என்ன பயன்படுத்துகிறோம் என்பதை நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தெரியாதவர்கள் உங்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் அனுப்பப்போகிறோம் என தொடர்பு கொள்ளும் பொழுது உடனே தகவலை கொடுக்காமல் அதனை அருகில் இருக்கக்கூடிய காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்.

அதேபோல் அவர் நண்பரின் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய ஸ்ரீநாதா, துணை ஆணையர், சைபர் கிரைம்

டிஜிட்டல் அரஸ்ட் என்ற ஒரு கான்செப்ட் கிடையாது.சிபிஐ, இ,டி என எந்தத் துறை சார்ந்தவராக இருந்தாலும் டிஜிட்டல் அரஸ்ட் பண்ண வாய்ப்பே கிடையாது. அப்படி ஏதேனும் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். உடனே அதனை அருகில் உள்ள காவல்துறையிடம் தெரிவியுங்கள்.* 1930 டோல் ஃப்ரீ எண் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் கொடுங்கள்.

அடுத்ததாக இன்வெஸ்ட்மென்ட் பிராட் (Investment Fraud) நடைபெற்று வருகிறது . மாதத்திற்கு 40 முதல் 50 சதவீதம் லாபம் வரும் என்று வாட்ஸ் ஆப்பிற்கு மெசேஜ் வரும் அதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்.

இன்வெஸ்ட்மெண்ட் ஃப்ராடு, டிரேடிங் பிராடு தான் தற்பொழுது சென்னையில் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மோசடியில் ஒரே நபர் 24 கோடியை இழந்துள்ளார். எனவே இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சைபர் கிரைம் பிரிவிலிருந்து பேசுகிறோம் என யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் உடனே அதிகாரப்பூர்வ வலைதளங்களில் சரி பார்த்துக் கொள்ளவும் தேவையில்லாத தகவல்களை பகிர வேண்டாம்.

அதிக குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் இருந்து தான் செயல்படுகிறார்கள். அதிலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறார்கள். அதேபோல் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணும் போலியான எண்களே.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலி மூலம் நடைபெறும் குற்றங்களுக்கு அந்த நிறுவனங்கள் நமக்கு உதவாதா என்று கேள்விக்கு?

அதில் நிறைய சவால் இருக்கிறது. அதற்கென்று ஒரு செயல்முறை இருக்கிறது அது முடிந்து வருவதற்குள் குற்றவாளி தப்பிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

Related Link
ஏ.எல்.விஜய்யின்

ஏ.எல்.விஜய்யின் "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 6 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved