news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்
tv

Also Watch

tv

Read this

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்

தனுஷ் உடன் மலையாள சூப்பர் ஸ்டார்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள ஸ்டார் நடிகர் மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பன்முக பரிமாணத்தில் தனுஷ் நடிப்பதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டி உள்ளார். இந்த நிலையில், D55ன் பட டைட்டிலை டீசர் மூலம் படக்குழு வெளியிட்டு உள்ளது. அடர்ந்த காட்டுக்குள் போலீசாரிடம் சிக்கி இருக்கும் இளைஞர்களை காப்பாற்ற வரும் தனுஷின் என்ட்ரியுடன் சேர்ந்த ஆக்சன் காட்சிகளுடன் படத்தின் டைட்டிலை ”ஓம்” என படக்குழு அறிவித்து உள்ளது. தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தந்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்
தமிழில் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் சங்கர். பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற சங்கரின் மகள் அதிதி சங்கர், விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், அவரை தொடர்ந்து சங்கரின் மகன் அர்ஜித்தும் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி உள்ளார்.

லவ்வர் பாய் படத்தின் மூலம் ஹீரோவாக அர்ஜித் சங்கர் நடிக்கும் நிலையில், அட்லியின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் குமார் படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி. இந்த நிலையில் சென்னையில் நடந்த பட பூஜையில் முதலமைச்சர் விஜய் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு சங்கர் மகனை வாழ்த்தி உள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் உதவி இயக்குநராக இருந்த அர்ஜித், அமெரிக்காவில் திரைப்படத் தயாரிப்பு படித்துள்ளதுடன், National School of Dramaவில் முறையான நடிப்பு குறித்தும் பயிற்சி எடுத்து உள்ளார்.

ரிலீஸ்க்கு விறுவிறுப்பாக உருவாகும் அரசன்
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஒரு திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன். வட சென்னை கதைக் களத்தை வைத்து உருவாகி வரும் அரசன், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக இணைந்துள்ள சிம்பு, வெற்றிமாறன் காம்போவும், வடசென்னையின் கதைக் களமும், ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களுக்கு டிரிபிள் ட்ரீட்டாகவே இருக்கும் என சொல்லப்படுது. இந்தநிலையில், அரசன் படத்தின் ஒரு மணி நேர படப்பிடிப்பை எடுத்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு.

இதுமட்டுமில்லாமல், அரசனில் சிம்புவை எதிர்க்கும் முரட்டு அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

காதல் பேசும் நைட்டு நிலா
இசை மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக நீலம் புரொடெக்சனில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த அகிரன் மோசஸ் இயக்கும் வெக்கை படத்தில் கிரிக்கெட் வீரராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நிலையில், படத்தின் நைட்டு நிலா பாடல் வெளியாகி உள்ளது. கானா பாலா பாடி இருக்கும் வெக்கை படத்தின் முதல் பாட்டுக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து உள்ளார். இளம் காதலை காட்டும் நைட்டு நிலா பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தந்தையை பாராட்டிய தனுஷ்
நெல்லையை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் இஸ்லாமிய குடும்ப பின்னணி வாழ்க்கையும், அவர்களின் காதல் கதையையும் பேசி இருக்கும் படம் ஹபீபி. இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களை கண்முன் காட்டியுள்ளாதாக ஹபீபி படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்துள்ளன. மீரா கதிரவன் இயக்கி இருக்கும் ஹபீபி படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அருள்குமார் என பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஹபீபி படத்தை பார்த்த நடிகர் தனுஷ், தனது அப்பாவின் நடிப்பை புகழ்ந்து பேசி உள்ளார். அவரது பதிவில், ’வேலை பிசியாக ஹபீபி படத்தை தாமதமாக பார்த்ததாகவும், படத்தில் யூசுஃபாக வாழ்ந்துள்ள தன் தந்தை உட்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதால் வாழ்த்துக்கள் என படக்குழுவை பாராட்டி உள்ளார்.

Related Link
புலியாக பேசி எலியாக மாறிய மகேந்திரன், வீடியோ வெளியீடு

புலியாக பேசி எலியாக மாறிய மகேந்திரன், வீடியோ வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்பீக்கரே கிழியும் அளவுக்கு பாடல் சத்தம், டயரில் சிக்கியபிஞ்சுக் குழந்தை

4
14 mins agoshare
ஸ்பீக்கரே கிழியும் அளவுக்கு பாடல் சத்தம், டயரில் சிக்கியபிஞ்சுக் குழந்தைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved