Also Watch
Read this
By: Admin News Tamil

ஜங்கிள் புக் கதையில் வரும் மோக்லி கேர்ள் என அழைக்கப்பட்ட சிறுமி 18வது வயதில் உயிரிழந்துள்ளார்.
சிறுவர்களின் காட்டூன் கதையில் வரும் மோக்லி என்ற கேரக்டரை போல் ரியல் வாழ்க்கையில் ஒரு சிறுமி வாழ்ந்து இருக்காங்க. உத்தரபிரத்தேசத்தின் பைரைச் மாவட்டத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் காடுகளில் சிறுமி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
காட்டில் உள்ள குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுடன் வாழந்த சிறுமீ அச்சமின்றி அங்கேயே சுற்றி அலைந்து திரிந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சரணாலயத்தின் சாலையில் அலைந்து திரிந்த சிறுமியை வனவிலங்கு போலீசார் மீட்டுள்ளனர். அப்போது சாதாரண மனிதர்கள் போல் இல்லாமல், விலங்குகளை போல் 4 கால்களில் நடந்தும், மக்கள் கண்களின் படுவதை தவிர்த்தும் விலங்குகளை போல் சத்தமிட்டும் சிறுமி அச்சுறுத்தியுள்ளார்.
கார்ட்டூனில் வரும் மோக்லி போல் சிறுமி வனவிலங்குகளுடன் வாழ்ந்ததால், அவரை மோக்லி சிறுமி என அழைக்கப்பட்டார். ஆனாலும் சிறுமிக்கு பூஜா என பெயரிட்டு, மறுவாழ்வு நல மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மனிதர்களை போல் வாழவும், உடல்நல சிகிச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லக்னோவில் இருந்த மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த மோக்லி சிறுமி 18வது வயதில் தற்போது நுறையீரல் தொற்று ஏற்பட்டு இருக்கு.
சிறுமியின் மூளையும் சரியாக வளர்ச்சியடையாததால், அறிவுசார் குறைபாடும், வலிப்பு நோயும் வந்து இருக்கு. தொடர்ந்து பல ஆண்டுகளாக மருத்துவ பராமரிப்பில் இருந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் சிறுமி, நுரையீரல் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் லக்னோ பராமரிப்பில் இருந்த சிறுமி மெல்ல மெல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved