news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
tv

Also Watch

tv

Read this

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

7 நாட்களுக்குள் விளக்கமளிக்க கெடு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என 7 நாட்களில் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களான,
மதுராந்தகம் மரகதம் குமரவேல்
தாராபுரம் சத்​ய​பா​மா
பெருந்துறை ஜெயக்​கு​மார்
அம்பாசமுத்திரம் இசக்கி சுப்​பையா
ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, உடனே தவெக​வில் இணைந்​தனர்.
தவெகவில் இணைந்த இந்த 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்தது. இந்த சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி
இதுகுறித்து, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வரும் ஜூன் 16, 17ஆம் தேதிகளில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ள இந்த நிகழ்வில், உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, விதிகள் குறித்து பேரவை செயலாளர், அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் பயிற்சி தர உள்ளனர். இந்தப் பயிற்சியில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டு உள்ளது.

நேரலையில் சட்டப்பேரவை
சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் அனைவரின் கருத்துக்கும் நான் மதிப்பளிப்பேன். ஆளுநர் உரையின் நகல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் அளிக்கப்படும்

ராஜினாமா விவகாரம்
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. ராஜினாமா குறித்து விளக்கம் தர ஏழு நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதிமுக கொறடா யார்? என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே இதுகுறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறி உள்ளார்.

Related Link
அன்று எம்ஜிஆர், இன்று விஜய் என இசக்கி சுப்பையா உறுதி

அன்று எம்ஜிஆர், இன்று விஜய் என இசக்கி சுப்பையா உறுதி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழக் கடை பாட்டிக்கு நேர்ந்த விபரீதம், தூய்மை பணியாளரின் கிரிமினல் புத்தி

5
5 mins agoshare
பழக் கடை பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்,button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved