news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மானாமதுரை அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
tv

Also Watch

tv

Read this

மானாமதுரை அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

மானாமதுரை, சிவகங்கை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

தமிழகத்தில் கிராமப்புற கோயில் திருவிழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த புரவி எடுப்பு நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவியது.விழாவையொட்டி கோயிலில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய மண் புரவிகள், அலங்கரிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் பாரம்பரிய இசை, வாத்தியங்கள் மற்றும் பக்தி முழக்கங்களுடன் புரவிகளை சுமந்து வந்து கோயிலில் சமர்ப்பித்தனர்.

இந்த புரவி எடுப்பு விழாவில் பட்டதரசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல ஆண்டுகளாக வேண்டிக்கொண்டிருந்த தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றி வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகள் வண்ண விளக்குகள், தோரணங்கள் மற்றும் அலங்காரங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், 38 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு உற்சவ விழா நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

புரவி எடுப்பு உற்சவ விழாவை முன்னிட்டு பட்டதரசி கிராமம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது.

Related Link
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

12
13 hrs 34 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau