news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆவேசம்
tv

Also Watch

tv

Read this

முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆவேசம்

அரியலூர், வானதிரையன்பட்டினம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாணதிரையன் பட்டினம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாணதிரையன்பட்டினம் ஊராட்சியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மின்சார தட்டுப்பாடு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குடிநீர் சரியாக வராதது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தொடர்ந்து குடிநீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார் போராட்டம் நடத்தி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் நேரில் வந்து உறுதிமொழி அளித்தால் மட்டுமே கலந்து கொள்வோம் என பொதுமக்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் போராட்டம் காரணமாக வாணதிரையன் பட்டினம்- உடையார்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
மானாமதுரை அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

மானாமதுரை அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

10
12 hrs 34 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau