news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மாலையில் வீடு திரும்பிய மாணவர்கள், மாலையிட்டு இறுதி அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

மாலையில் வீடு திரும்பிய மாணவர்கள், மாலையிட்டு இறுதி அஞ்சலி

5 பேர் பலி, ரத்தக்கண்ணீர் சிந்தும் பெற்றோர்

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவாரூர் மற்றும் கள்ளக்குறிச்சி அருகே ஒரே நாளில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேர் துடிதுடிக்க உயிரிழந்தது பலரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. ரத்தவெள்ளத்தில் கிடந்த மகன்களை கண்டு தலையிலும், நெஞ்சிலும் அடித்தபடி பெற்றோர், ரத்தக்கண்ணீர் சிந்திய நிலையில் விபத்தில் தொடர்புடைய 2 வாகன ஓட்டுநர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டம், காரக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி நோக்கி வந்த டவேரா கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது அதிவேகமாக மோதியது. காரின் டயர் வெடித்ததாகவும், அதனால்தான் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது மோதியதாகவும் கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திலேயே மாணவர் யோகேஸ்வரன் உயிரிழந்தார். இதனிடையே, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரக்சித், ராஜமுரளி ஆகிய 2 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே மாணவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

மது போதையில் ஓட்டுநர்
தகவல் அறிந்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓடிவந்த மாணவர்களின் பெற்றோர், உருண்டு புரண்டு கண்ணீர் சிந்தினர். இதனிடையே, டவேரா காரை ஓட்டிவந்த ஓட்டுநர் உலகநாதனை மடக்கி பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தபோது அவர் மது அருந்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், டயர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டதா? அல்லது மது அருந்தியபடி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது மக்கள் சாலை மறியல்
இது ஒருபுறமிருக்க, பள்ளி அருகே உள்ள மன்னார்குடி - தஞ்சை சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே...
இதேபோல், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த ஒரு விபத்திலும் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கெடிலம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ என்ற தனியார் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த 4 பேரையும் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவர் பைக்கில் வந்துள்ளார்.

ஒரே பைக்கில் 5 பேர்
ஒரே பைக்கில் ஏறிய 5 மாணவர்களும் மேட்டாத்தூர் கிராமத்தில் உள்ள சர்வீஸ் சாலைக்கு செல்வதற்காக அருகே உள்ள சாலையை கடக்க முயன்றனர். அப்போது, விழுப்புரத்திலிருந்து மணப்பாறைக்கு சென்ற ஆம்னி காரும் பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஜெஸ்டின், புருனோ ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 மாணவர்கள் மற்றும் காரில் இருந்த இருவர் என 5 பேர் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை ஒருவழிப்பாதையாக மாற்றி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

டூவீலர் அலர்ட்...
இருவேறு இடங்களில் நடந்துள்ள இந்த விபத்துக்கள் பலரையும் பதற வைத்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பெற்றோர் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அதேபோல் தங்களது பைக்கையும் அவர்கள் இயக்குவதை அனுமதிக்க கூடாது எனவும் கூறும் சமூக ஆர்வலர்கள் தனது மகன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து செல்லமாக வளர்க்கிறோம் என்ற பெயரில், நாமே அவர்களை இதுபோன்ற விபத்துகளில் சிக்க வைக்க கூடாது எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Related Link
ஒரே ஹவுஸ், பலருக்கு லீஸ், கிடப்பில் கேஸ், கேம் ஆடுகிறதா POLICE?

ஒரே ஹவுஸ், பலருக்கு லீஸ், கிடப்பில் கேஸ், கேம் ஆடுகிறதா POLICE?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மயானத்தை ஆக்கிரமித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

0
34 mins agoshare
பொதுமக்கள் எதிர்ப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved