news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்தடங்கல் என ஸ்டாலின் புகார்
tv

Also Watch

tv

Read this

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்தடங்கல் என ஸ்டாலின் புகார்

மின் கட்டணத்தை பார்த்து மக்கள் குமுறல்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மூன்று லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை தவெக அரசே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Related Link
லஞ்ச ஒழிப்புத்துறை மெகா பிளான், வரலாற்றை ரிப்பீட் செய்யும் DVAC?

லஞ்ச ஒழிப்புத்துறை மெகா பிளான், வரலாற்றை ரிப்பீட் செய்யும் DVAC?

தவெக ஆட்சியில் மக்கள் குமுறல் - மு.க.ஸ்டாலின்
திமுக ஐடி விங் வீடியோ உடன் வெளியிட்ட தகவலை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல் தான். முதலில் மின்வெட்டு பிரச்சினை, இப்போது மின் கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால அவகாசம்...
சமூக ஊடகங்களில், மக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்த குளறுபடி ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ரீடீங்,சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்த பெயர்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா?

4
9 mins agoshare
ChatGPT, Claude, Gemini...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau