Also Watch
Read this
கர்நாடகா செல்வது குறித்து முதலமைச்சர் விஜய் முடிவு எடுப்பார் என்றும், கர்நாடக பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.

கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக 3 லட்சத்து 70,000 புகார்கள் வந்ததாக கூறப்படும் தகவலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்து, மக்களை குழப்பும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
"மின் கட்டண குளறுபடியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் இல்லை," எனக்கூறிய அமைச்சர் நிர்மல்குமார், கூடுதல் கட்டணம் தொடர்பாக 3 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூடுதல் மின் கட்டணம், விளக்கம்
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
மின் கட்டணம் அதிகரிப்பு குறித்து 3.7 லட்சம் புகார்கள் வரவில்லை. மின் கட்டண புகார் தொடர்பாக வழக்கமான ஆய்வு தான் நடைபெறுகிறது. 9 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு 2 மடங்கு, 3 மடங்கு என்று, அதிக மின்கட்டணம் வந்துள்ளது. மின் கட்டண உயர்வு என வதந்தி பரவுகிறது, வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் மின் கட்டணம் உயா்கிறது.

இந்தாண்டு குறைவு தான்
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகாிக்கும் போது மின் கட்டணம் அதிகாிக்க தான் செய்யும். மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

முதல்வரின் காவிரி பயணம்...
காவிரி பிரச்சனை, மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் விரைவில் முடிவு எடுப்பார். காவிரி பிரச்சனையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார். மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா? என்ற கேள்விக்கு அவரே அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.