Also Watch
Read this
By: Web Team

தொடர் விலை உயர்வால், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 11,000 ரூபாயை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் 2 முறை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,600க்கு விற்பனை ஆனது. சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் செப்டம்பர் 27ஆம் தேதி, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை எட்டி உள்ளது.
இன்று இரண்டு முறை உயர்ந்த விலை
இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக, இன்று பிற்பகலிலும் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது.
இதன்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 86,160 ரூபாயாக அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் 10,770 ரூபாயாக உயர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved