Also Watch
Read this
By: Web Team

சென்னையில் இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.85 ஆயிரத்தை கடந்தது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், இன்று காலை சவரனுக்கு ரூ.720 வரை உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து ரூ.10,640க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்ததால் தங்கத்தின் விலை ரூ.85,120 ஆக உள்ளது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.159க்கும், கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து ரூ.1,59,000க்கும் விற்பனையாகிறது.

நேற்று முன் தினம் 2 நாட்களாக சற்று விலை குறைந்த தங்கம், கடந்த 2 நாட்களாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி ரூ.73,200 ஆக இருந்த தங்கத்தின் விலை அம்மாத முடிவில் ரூ.76,960 ஆக உயர்ந்தது. தற்போது கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரே மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும், அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved