Also Watch
Read this
By: Web Team

இன்று காலையில், ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், பிற்பகலில் விலை அதிகரித்துள்ளது.
ஒரு சவரன் ரூ.87ஆயிரம் வரை உச்சம் தொட்ட தங்கம், தொடர்ச்சியாக நேற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. விலை குறையாதா? என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னையில் நேற்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. ஆனால், மாலையில் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ‘ஷாக்’ கொடுத்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,950 ஆகவும், ஒரு சவரன் ரூ.87,600 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,840 ஆகவும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.86,720 ஆகவும் விற்பனையானது..
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.161 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.3000 குறைந்து ஒரு கிலோ ரூ.1.61 லட்சத்துக்கும் விற்பனையானது.
பிற்பகலில் விலையில் அதிரடி மாற்றம்...
இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 10 ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரித்தது.
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.87,200க்கு விற்பனையானது.