news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய திருமாவளவன்
tv

Also Watch

tv

Read this

விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய திருமாவளவன்

பாஜக மீது குற்றச்சாட்டு

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய்யை பதவியேற்க அனுமதிப்பது தான் அரசியல் சட்டப்பூர்வமான கடமை என்று, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

ஏற்புடையது அல்ல...
சென்னையில் செய்தியாளர்களிடன் பேசிய திருமாவளவன் கூறியதாவடு;
பாஜக, மோடி, அமித்ஷா, தமிழக அரசியலுக்குள் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே விஜய்யை பதவி ஏற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அரசிலமைப்பு சட்டம் காட்டுகின்ற வழிகாட்டுதல். விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய நிலையில், ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதாக இல்லை. தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. அவருக்கு மெஜாரிட்டி இருக்கிறதா? என்பதை சட்டமன்றத்தில் தான் அவர் நிரூபிக்க வேண்டும். அதற்கும் அவரை அனுமதிக்க வேண்டும்.

திரைமறைவில் இடையூறு
அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கின்ற ஐயம் உருவாகிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. எங்களை பொறுத்தவரை மக்கள் வழங்கிய தீர்ப்புப்படி விஜய் முதல்வராக பதவி ஏற்பது தான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம்.

நாங்கள் பரிசீலிக்கிறோம்
பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் கும்பல் அவரை கட்டுப்படுத்த முயற்சித்த போது, நாங்கள் காங்கிரஸ், இடதுசாரிகளோடும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என அவர் சொல்லி இருப்பதை நாங்கள் பரிசீலிக்கிறோம். இதில் உள்ள நிறை, குறை, நல்லது கெட்டது மற்றும் எதிர்கால அரசியல் போக்குகளை நாங்கள் பரிசீலிப்போம் என சொல்லி இருக்கிறோம். இது குறித்து முடிவை நான் முன்கூட்டியே அறிவிக்க முடியாது. அவர்களாகவே பாதுகாப்பு கொடுத்தார்கள், பிறகு அவர்களாகவே பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இப்போது என்ன நெருக்கடியை தர முயற்சிக்கிறார்கள்.

விஜய்க்கு ஆதரவு, ஆலோசனை
மீண்டும் மீண்டும் விஜய்யை, கைப்பாவையாக வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆளுநரும் அதற்கு ஏற்றபடி, செயல்படுதுபோல தெரிகிறது. விஜய்யை பதவியேற்க அனுமதிப்பது தான் அரசியல் சட்டப்பூர்வமான கடமை. விஜய் கடிதம் எழுதியிருக்கிறார், பேசினார், நாங்கள் இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார். 

Related Link
விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் விளக்கம்

விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் விளக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
2 hrs 34 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau