news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

tv

Read this

இதுதான் திமுக ஆட்சி - இபிஎஸ் காட்டம்

திமுக வீழ்ந்தே ஆக வேண்டும் - இபிஎஸ்

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். கஞ்சா போதை ஆசாமிகளால், தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

கடுமையான சட்ட நடவடிக்கை
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில், மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம். படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?

தமிழகம் வாழ வேண்டுமா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது? என்று Ideaவே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்றே ஒன்று தான், தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.


Related Link
போதை, பாலியல் சீண்டல், அத்துமீறல், கொடூரம்

போதை, பாலியல் சீண்டல், அத்துமீறல், கொடூரம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : நடிகர் பாக்யராஜ் காலமானார்

2
1 min agoshare
🔴LIVE : நடிகர் பாக்யராஜ் காலமானார்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau