Also Watch
Read this
தமிழ்நாட்டில் தற்போதுள்ள சூழலில் பாஜக யாரையும் ஆதரிக்கவில்லை எனக்கூறி உள்ள நயினார் நாகேந்திரன், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் விஜய் நீதிமன்றம் செல்லலாம் எனவும் யோசனை கூறி உள்ளார்.

தேர்தல் முடிவுகள், ஏற்கிறோம்
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டு மக்களின் நலன், முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பாஜக, அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது. தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் பாஜக-க்கு இந்த தேர்தலில் மக்கள் வழங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே தமிழக பாஜக, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்
ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் எவ்வித நேரடிப் பங்களிப்பையும் பாஜக மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved