Also Watch
Read this
By: Web Team

ஈரான் எந்த நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கொமேனி, இது போன்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரானை தாக்கியது மிகப்பெரிய தவறு என்ற அவர் இதற்காக இஸ்ரேல் பயங்கரமாக தண்டிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
டிரம்பின் மிரட்டலை அலட்சியப்படுத்திய அவர், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் எனவும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.