news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமித்ஷா உடன் பேசியது என்ன? செங்கோட்டையன் தகவல்
tv

Also Watch

tv

Read this

அமித்ஷா உடன் பேசியது என்ன? செங்கோட்டையன் தகவல்

டெல்லியில் சந்திப்பு - விளக்கம்

83

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sengottian

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது பேசிய விவரங்கள் குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:

ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு சென்றேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம்.

இதன் அடிப்படையில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு, இது வரவேற்கத்தக்கது.

உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அங்கே ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் 10 மணிக்கு புறப்பட்டது. இப்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறினேன். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள்.

மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் கேளுங்கள்; செங்கோட்டையன் பரபரப்பு பிரஸ்மீட் | Sengottaiyan Pressmeet | ADMK | Amithshah

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கதறி அழுத பாக்யராஜ் மனைவி.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன CM

2
8 mins agoshare
Bhagyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau