Also Watch
Read this
By: Web Team

விஜய்-க்கு ஆதரவாக, அவரது நண்பர் கருத்து பதிவிட்டுள்ளார்.
கரூரில், தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் 41 பேர் தங்கள் உயிரை பறி கொடுத்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால், ’எக்ஸ்ட்ரீம் அப்செட்’ ஆன, விஜய், 3 நாட்களாக மவுனமாக இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், "நானும் மனுஷன் தான், மேலும், அசம்பாவிதம் நடக்க கூடாது என்று தான் அங்கே போகவில்லை" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். "பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்" என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகரும், விஜய்-ன் நண்பருமான சஞ்சீவ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" என்று விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.