Also Watch
Read this
By: Web Team

அதிமுக பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, தங்களது குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் அண்ணாவை ஒருநாள், ஒரு நொடி கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், 4 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு, அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுவதாகவும், அதிமுகவை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் தாம் மீட்டுத் தருவதாக தெரிவித்தவர், இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு தாம் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved