Also Watch
Read this
By: Web Team

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் அடித்ததோடு மட்டுமில்லாமல் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 120 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.
மேலும், இதுவரை அவர் 229 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனை பட்டியலில் 8 ஆயிரத்து 32 ரன்கள் மற்றும் 235 விக்கெட்டுகளுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேரி சோபர்ஸ் முதலிடத்திலும், 13 ஆயிரத்து 289 ரன்கள் மற்றும் 292 விக்கெட்டுகளுடன் தென்னாப்பிரிக்க வீரர் காலீஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.