news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

ராஞ்சி, ஜார்கண்ட்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhoni birthday

தோனியை வாழ்த்தி கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம் :

மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளையொட்டி அவரது ராஞ்சி இல்லத்தின் வெளியே ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடினர். கையில் பேனருடன் முழக்கமிட்டபடி வந்திருந்த அவர்கள் தோனியை வாழ்த்தி கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்  ஷாபூர் ஜத்ரான் வீரர் மரணம் :

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் ஜத்ரான் அரிய வகை நோய் தாக்கி மரணமடைந்துள்ளார். 38 வயதான இவர், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது டெஸ்ட் போட்டி :

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 499 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 50 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி, 4-ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி :

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Related Link
உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தோனேசியாவிடம் நேற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

0
1 min agoshare
ஏவுகணைகள் ஒப்பந்தம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau