news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தோனேசியாவிடம் நேற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
tv

Also Watch

tv

Read this

இந்தோனேசியாவிடம் நேற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜகார்த்தாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏவுகணைகள் ஒப்பந்தம்

இந்தோனேசியா வாங்குவதாக ஒப்பந்தம் கையெழுத்து 

இந்தியாவிடம் இருந்து, "பிரம்மோஸ்" மற்றும் "அஸ்திரா" ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் உட்பட 12 ஒப்பந்தங்கள் இந்தோனேசியாவிடம் நேற்று கையெழுத்தாகின. இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டவுடன் ஜகார்த்தாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகள் இடையே ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பாகிஸ்தான் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

பாகிஸ்தான் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். பிறகு, பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 8 வீரர்களையும் மீட்டனர். பலூசிஸ்தான் மாகாணம் ஜியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

சரக்கு விமானம் அரபிக் கடலில் மாயம் 

5 பணியாளர்களுடன் சரக்கு விமானம் அரபிக் கடலில் காணாமல் போனதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானத்தில் நேற்று இரவு 9.18 மணிக்கு நேவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், இரவு 9.22 மணிக்கு மிக வேகமாக கீழே இறங்குவது ரேடாரில் காணப்பட்டதாகவும், சுமார் 155 கடல் மைல் தொலைவில் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


Related Link
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது

6
13 mins agoshare
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்ததுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau