Also Watch
Read this
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி மாணவியிடம் ஒரு சகோதரி ஸ்தானத்திலேயே கேள்வி கேட்டதாகவும் விளக்கம் அளித்து உள்ளார்.

அரசியல் ஆளுமை தான்
இதுதொடர்பாக, அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருப்பதாவது;
ஆய்வுப் பணி செய்வது காலங்காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏவும் அவரவர் தொகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது ஒரு மரபுதான். இது குறித்து நான் விசாரித்தபோது, அமைச்சர் கீர்த்தனா எந்த ஒரு காணொலியையும் எடுக்கவில்லை. அவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் தான். தமிழ்வழியில் படித்து நன்றாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு தனது தனித்தன்மையை வளர்த்துக் கொண்ட ஓர் அரசியல் ஆளுமை தான்.

அக்கா ஸ்தானத்தில் கீர்த்தனா
மற்றபடி ஊடகங்கள் எடுத்த காணொலி தான் சர்ச்சையாகிவிட்டது. இந்த ஆய்வு என்பது ஒரு மரபுதான். எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களது ஆங்கிலப் புலமை அல்லது அவர்களது பின்புலம் பற்றி எந்தவொரு அரசியல் காரணங்களுக்காக யாருமே கேட்கக் கூடாது. அந்த மாணவியைப் பார்த்தபோது, தன்னைப் போல ஒருவரை பார்த்ததாக தோன்றியதால், அக்கா ஸ்தானத்தில் தான் அமைச்சர் கீர்த்தனா பேசினார். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சர்ச்சைக்கு விளக்கம்
சட்டம் - ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் விரிவாக பேசி உள்ளேன். போதை கலாச்சாரத்தை ஒழித்து வருகிறோம். கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தோழமையாக பார்க்கும் கட்சிதான் தவெக. தங்களை மீறி யாரும் பேசக்கூடாது என்று நெருக்கடி கொடுக்கும் கட்சி தவெக இல்லை. திருமாவளவனின் பேச்சை ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையான நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.