news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய நாட்டின் உயிரிய விருது
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய நாட்டின் உயிரிய விருது

பிரபோவோ சுபியாண்டோ வழங்கி கவுரவித்தார்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

"பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா" 

பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய நாட்டின் உயிரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, "பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா" என்கிற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்த விருது, இந்தோனேசியாவின் ஒற்றுமை, தொடர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்காற்றிய தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தோனேசிய பயணத்தின்போது, இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் முதலீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 2 நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.

"நான் பிரதமர் மோடியின் சிறந்த அபிமானி" 

தாம் பிரதமர் மோடியின் சிறந்த அபிமானி எனவும், அவரது பல திட்டங்களை தாம் பின்பற்றி வருவதாகவும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தபோது பேசிய அவர், மோடியின் பல திட்டங்களை பின்பற்றி வருவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

"3 மந்திரங்களுடன் இந்தியா முன்னேறி வருகிறது" 

சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய 3 மந்திரங்களுடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா தனது சொந்த கனவுகளை மட்டுமல்லாமல், நட்பு நாடுகள் அனைத்தின் கனவுகளையும் நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார்.

Related Link
செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு முன் ஜாமின்

செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு முன் ஜாமின்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது

7
50 mins agoshare
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்ததுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau