news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு முன் ஜாமின்
tv

Also Watch

tv

Read this

செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு முன் ஜாமின்

இருவருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமின்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு முன்ஜாமின் கிடைத்துள்ளது.

குதிரை பேரம், வழக்கு...

தவெக ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சியின் எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி பெயர் இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுக்கள் மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

எந்த ஆதாரமும் இல்லை
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக யூகத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது என்றும், குதிரை பேரம் பேசியது தொடா்பான எந்த ஆதாரமும் இல்லை, ஆட்சி கவிழ்ப்பு என போலீசாா் மிகைபடுத்துகின்றனா் என்றும், செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. கால் செய்யப்பட்டதற்கான CDR உள்ளிட்ட எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞா் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.

திமுகவால் எப்படி முடியும்?
59 பேர் உள்ள திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? 35 கோடி குதிரை பேரம் என்பது யூகம்தான் என்றும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் சபாநாயகர் தானே மாற்றப்படுவார், ஆட்சியை எப்படி கவிழ்க்க முடியும்? என்றும், அசோக் குமார் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.

வலுவான ஆதாரங்கள் உள்ளன
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன; செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், 40க்கும் மேற்பட்ட முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இருந்துள்ளார் என்றும், பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையில் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இருவருக்கும் முன்ஜாமின்
இருதரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்ட நிலையில், தவெக அரசை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Link
திமுகவுக்கு வரச் சொல்லி ரூ.50 கோடி பேரம்? சிக்கிக் கொண்ட மாஜி மினிஸ்டர்?

திமுகவுக்கு வரச் சொல்லி ரூ.50 கோடி பேரம்? சிக்கிக் கொண்ட மாஜி மினிஸ்டர்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது

7
49 mins agoshare
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்ததுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau