Also Watch
Read this
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜூலை 8ஆம் தேதி, இரண்டு முறை குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, காலையில் 560 ரூபாய் குறைந்தது. பிற்பகலில், ரூ.1040 குறைந்தது. இதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு மேலும் ரூ.5 குறைந்து ரூ.245க்கு விற்பனை ஆனது.

ஜூலை 04
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 05
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 06
ஒரு சவரனுக்கு 1,120 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 08 காலை
ஒரு சவரனுக்கு 560 சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 08 பிற்பகல்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, காலையில் 560 ரூபாய் குறைந்தது. பிற்பகலில், மேலும் ரூ.1040 குறைந்தது. இதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு மேலும் ரூ.5 குறைந்து ரூ.245க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 04 - ரூ.1,09,600
ஜூலை 05 - ரூ.1,09,600
ஜூலை 06 - ரூ.1,08,480
ஜூலை 07 - ரூ.1,07,200
ஜூலை 08 - ரூ.1,06,640 இன்று காலை
ஜூலை 08 - ரூ.1,05,600 இன்று பிற்பகல்