Also Watch
Read this
By: Manigandan Raja

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவின் செயலர்கள் :
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் 4 தனிச் செயலாளர்களும் ஒரே நாளில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவின் தனிச் செயலாளர், உதவி தனிச் செயலாளர் மற்றும் 2 கூடுதல் தனிச் செயலாளர்கள் ஆகிய 4 பேரையும் ஒரே நாளில் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா டிஎஸ்பியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் :

தெலங்கானாவில் வருமானத்துக்கு அதிகமாக 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த போலீஸ் டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் கம்ப்யூட்டர் சேவை பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய சங்கிரெட்டி பீம்ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் சென்றது. விசாரணையில், சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது கண்டறியப்பட்டது.
2008-ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு :

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்துள்ளது. 2008-ல் அகமதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர்.
தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை சேர்ந்த 24 பேர் கைது :
சர்வதேச அளவில் லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை மற்றும் மிரட்டல் சதியில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.