Also Watch
Read this
By: Manigandan Raja

"மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்"
சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் உணர்ச்சி வசப்பட்டு பேசிருக்கிறாரு. அதில், "என் வாழ்க்கையின் பாதியை சினிமாவில்தான் கழித்திருக்கிறேன். ஆனால், என் தனிப்பட்ட முடிவு உங்கள் அனைவரையும் காயப்படுத்தியதே எனக்கு இருக்கும் ஒரே வருத்தம். அதற்காக உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
" என்று தெரிவித்துள்ளர். மேலும், "இனி ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டேன். 'சந்தோஷ்', 'குமரன்', 'துருவன்', 'தனி ஒருவன்', 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களைப் போலவும், உங்கள் 'கராத்தே பாபு'வாகவும் இன்னும் வலிமையாக மீண்டும் வருகிறேன்.." என்று தெரிவித்துள்ளார்.
"புதுப்பேட்டை-ல அந்த SCENE வலி தாங்க முடியல"

நடிகை ஸ்னேகா, 'புதுப்பேட்டை' படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத வலி மிகுந்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "புதுப்பேட்டை படத்தில் பாலா சிங் 'அன்பு' என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தாரு.
அப்போ, ஒரு காட்சியில் அவர் என்னை வயிற்றில் எட்டி உதைக்க வேண்டும். ஆனால் அந்தக் காட்சியை மிகவும் இயல்பாகவும், தீவிரமாகவும் வர வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் மீண்டும் மீண்டும் சொல்லிட்டே இருந்தாரு.
இதனால, அந்த வேகத்தில் பாலா சிங் உண்மையாகவே என் வயிற்றில் பலமாக உதைச்சுட்டாரு. எனக்கு அப்போ கடுமையா வலிச்சிச்சு அதனால, ஷாட் முடிந்ததும் நான் நேராக என் கேரவனுக்கு போயிட்டேன். கேரவனில் வலி தாங்க முடியாமல் கதறி அழுதேன்.
உடனே, இந்த சம்பவம் குறித்து அறிந்த இயக்குநர் செல்வராகவன் கேரவனுக்கு வந்து, 'அவர் உண்மையாகவே உன்னை உதைத்துவிட்டாரா? மிகவும் வலிக்கிறதா? மன்னித்துவிடு. கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வா," என்று வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக ஸ்னேகா தெரிவித்துள்ளார்.
"சிம்புவுடன் நடிப்பதை விதியின் கையில் விட்டுட்டேன்"

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, ஃபஹத் பாசில், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நட்டி உள்ளிட்டோர் நடித்த 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கயாடு லோஹர், சிம்பு குறித்து சுவாரஸ்யமான கருத்தை பகிர்ந்துருக்காங்க.
அதில், "சிம்பு சார் உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதெல்லாம், ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் கைவிடப்படுது. அதனால், அவருடன் நான் இறுதியாக இணையும் படம் நிச்சயமாக மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நம்புறேன். அதனால அதை நான் விதியின் கையில் விட்டுடேன்.." என்று பேசியுள்ளார்.