news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சினிமா பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்
tv

Also Watch

tv

Read this

சினிமா பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்

திருவாரூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தவெகவினர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அரவூர் ஊராட்சி பைத்தஞ்சேரியில் காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி அண்ணாதுரை என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை காண தவெக வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் விஜய் தலைமையில் சென்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை பார்க்க சென்ற காட்சிகள் அனைத்தையும்
பதிவு செய்து அதாவது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் இருந்து மாடிப்படி வழியாக அவர் இருக்கும் படுக்கைக்கு சென்று அவரைப் பார்த்து வரும் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த காட்சிகளுக்கு பின்அணியாக தலைவா தலைவா என்கிற சினிமா பாடல் இணைக்கப்பட்டு தவெக ஒன்றிய செயலாளர் விஜய்யின் எக்ஸ் பக்கத்தில் தமிழக முதல்வர் உத்தரவு படி காட்டுப் பன்றி தாக்கிய தொழிலாளியை சந்தித்து நலம் விசாரித்ததாக ரீல்ஸ் ஆக வெளியிடப்பட்டுள்ளது.

காட்டுப் பன்றி தாக்கிய தொழிலாளியை நலம் விசாரிக்க சென்றார்களா அல்லது ரீல்ஸ் போடுவதற்காகவே சென்றார்களா என்று நெட்டிசன்கள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர். சமீப காலமாக அரசு பள்ளி மருத்துவமனை போன்ற இடங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொள்வதோ அல்லது ரீல்ஸ் எடுப்பதோ கூடாது என தலைமை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் இது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கே அனுமதி பெற வேண்டும் என கட்டுபாடுகள் விதிக்கும் மருத்துவமனை நிர்வாகம் தவெகவினர் ரீல்ஸ் வீடியோ எடுக்க அனுமதிப்பது எப்படி என்பதும் புரியாத புதிராக உள்ளது.

Related Link
திருத்தணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருத்தணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 35 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau