news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்தணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

திருத்தணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

திருத்தணி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பி.டி.புதூர் அருந்ததியர் காலணியைச் சேர்ந்தவர் ஹேமநாதன் ( 23) இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா உள்ளம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவ்வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து அரக்கோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இவ்வழக்கில் சந்தேகத்தின்
பேரில் அரக்கோணம் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இளைஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் திருத்தணி அரக்கோணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படும் என்று போலீசார் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Link
பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாத்தாவும் பேரனும் ஒருவரே என VAO சான்றளித்த விபரீதம்

0
7 mins agoshare
மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau