Also Watch
Read this
By: Manigandan Raja

நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்க்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில், படத்தின் 100வது நாள் வெற்றியை முன்னிட்டு படக்குழு சிறப்பா கொண்டாடிருக்காங்க.
இதில், படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு Mahindra BE 6 காரை பரிசளித்து கவுரப்படுத்திருக்காரு. அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன் இதற்கு முன் கடைசி விவசாயி, ஆண் பாவம் பொல்லாதது போன்ற படங்களில் உதவி இயக்குநரா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் 'மாவீரன் 2' வருகிறதா?

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில், மாவீரன் படத்தின் இரண்டாம் பாகமான 'மாவீரன் 2' தற்போது திரைக்கதை மற்றும் எழுத்துப் பணிகளில் இருப்பதாக தகவல் வெளியாகிருக்கு.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் தொடர்ச்சியில் நடிக்க சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த படத்தின் படப்பிடிப்பு 2028-ஆம் ஆண்டில்தான் தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது. எனினும், இந்த தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஜனநாயகன்' ஜூலை 23 வெளியீடு உறுதி?

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகிருக்கு. CBFC பரிந்துரைத்த திருத்தங்களின் அடிப்படையில், படத்தின் இறுதி பதிப்பு சரிபார்ப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டு, தணிக்கை செயல்முறை முழுமையாக முடிந்துள்ளதாக சொல்லப்படுது.
இதையடுத்து, படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படலானு எதிர்பார்க்கப்படுது. இதன் காரணமாக, ஜூலை 23 அன்று திரைப்படம் வெளியாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிருக்கு.