news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குன்னூரில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

குன்னூரில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக புகார்

குன்னூர், நீலகிரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக புகார்

குன்னூர்  அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு பகலாக அனுமதியின்றி இயக்கப்படும் ஜேசிபி, ஹிட்டாச்சி, குப்பட்டா ஓட்டுவதற்கு உடந்தையாக செயல்படும் குன்னூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் VAO சதீஷ்குமார்.

கடந்த 6.7.2026 அன்று குன்னூர் அருகே உள்ள பன்னாட்டி பகுதியில் அனுமதியின்றி மண்ணை தோண்டும் பணியில் குப்பட்டா (சிறிய ரக ஜேசிபி) ஓட்டப்பட்டு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட உலிக்கல் VAO சதீஷ்குமாரிடம் தெரியப்படுத்தி எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நமது செய்தியாளர் செய்தி சேகரிப்பது தெரிந்து செய்தி வெளியான மாட்டிக்கொள்வோம் என்று வட்டாட்சியர் மற்றும் VAO
தப்பித்துக் கொள்ள 7.7.2026 அன்று கண் துடைப்புக்காக கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட இடத்தில் குப்பட்டா இல்லை என்று புகார் அளித்து CSR காப்பி பெற்றுள்ளனர்.

இதே போல் 6.7.2026 அன்று குன்னூர் அருகே உள்ள கரோலினா பகுதியில் அனுமதி இன்றி இரவு வேளையில் டார்ச் லைட் பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருந்த குப்பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்ததின் பேரில் மறுநாள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வட்டாட்சியரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய சொல்லி உத்தரவு செய்தது அடிப்படையில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது வட்டாட்சியர்
அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி, பொக்களின், குப்பட்டா போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் முக்கிய தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஓட்ட வேண்டும்.

அப்படி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினாலும் அதில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை குறிப்பிட்ட தேதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணி வரை இயக்க வேண்டும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் உடனடியாக அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.

மேலும் இரவு நேரத்தில் ஜேசிபி பொக்லைன் போன்ற கனரக வாகனங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. விவசாய நிலத்தில் பயன்படுத்த சிறிய ரக குப்பட்டா பயன்படுத்த தோட்டக்கலைத் துறையின் இடம் அனுமதி பெறுவது அவசியம் இந்த விதிமுறைகள் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

இது போன்ற விதிமுறைகள் இருந்தாலும் ஜேசிபி ஓட்டுநர்கள் நில உரிமையாளரிடம் லட்சக்கணக்கில் தொகையை பெற்றுக் கொண்டு அதில் வட்டாட்சியருக்கு முன்கூட்டியே ஒரு தொகையை கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஜேசிபி ஓட்டப்படும் தகவலை முன்கூட்டியே வட்டாட்சியரிடம் கூறிவிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், VAO, வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டால் தான் நீலகிரியில் வயநாடு போல் ஒரு சம்பவம் நடைபெறுவதை தடுக்க முடியும் இயற்கை அழிவு கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Link
தாத்தாவும் பேரனும் ஒருவரே என VAO சான்றளித்த விபரீதம்

தாத்தாவும் பேரனும் ஒருவரே என VAO சான்றளித்த விபரீதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் குப்பை மூட்டைகள்

0
45 mins agoshare
குப்பை மூட்டைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau