Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் எஸ்.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இவர்களை ஏற்றி செல்ல எட்டுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனம் உள்ளது.
இந்நிலையில் இன்று பள்ளியில் தேங்கிய குப்பைகளை மூட்டைகளாக கட்டி குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனத்தில் வைத்து புஞ்சை புளியம்பட்டி அருகாமையில் உள்ள பகுதியில் குப்பைகளாக கொட்டியுள்ளனர்.

இதனால் பள்ளி வாகனத்தில் செல்லும் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் இது போன்ற செயல் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.