Also Watch
Read this
By: Web Team

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.