Also Watch
Read this
By: Web Team

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிக்கு முன்னேறினார். உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் சனீத் தயானந்த் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21க்கு 6, 21க்கு 16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.