Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம் :
இலங்கை தம்புள்ளாவில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையேயான டி 20 முத்தரப்பு போட்டியில், தோல்விக்குப் பிறகு இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி, தடுமாற்றமான தொடக்கத்திற்குப் பிறகு 265 ரன்களை எடுத்தது. இதன் பிறகு 266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 265 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் இலங்கை 16 ரன்கள் எடுக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோரால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, களத்தில் இருந்த இலங்கை வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியையும், சில வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர் ஒருவரை ஆக்ரோஷமாக தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
3-2 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி :

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை தொடரில் குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, அமெரிக்காவை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் அமெரிக்கா 2 கோல்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 3 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. இதனையடுத்து 2ஆம் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இந்திய அணி 3க்கு 2 என்ற முன்னிலையை இறுதிவரை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved