news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
tv

Also Watch

tv

Read this

மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

West Indies

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேற்கிந்திய தீவுகள்

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டி :

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அதிகபட்சமாக 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

இந்தியாவை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி :

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஓவரில் இந்தியா "ஏ" அணியை வீழ்த்தி இலங்கை "ஏ" அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவரில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்துகளில் 72 ரன்களும், விப்ராஜ் நிகம் 49 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் இலங்கை அணி 16 ரன்கள் எடுக்க, இந்தியா 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

"விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர்" :

விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், களத்தில் மட்டும்தான் விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் என விமர்சிக்கப்படுவதாகவும், இவை அனைத்தும் உண்மைதான் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், களத்துக்கு வெளியே விராட் கோலி முற்றிலும் நேர்மாறானவர் எனவும், களத்தில் ஆக்ரோஷமாகவும், களத்துக்கு வெளியே மிகவும் அமைதியாகவும் செயல்படும் அவரது பண்பு தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Related Link
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
30 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau