news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவல்

ஜே.டி.வான்ஸ்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவல் :

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் ஏற்கெனவே கையெழுத்தாகி விட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இரு தரப்பிலும் இந்த ஒப்பந்தம் ஏற்கெனவே டிஜிட்டல் முறையில் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும்.

இந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பொறுத்தே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் அதிரடி :

பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார்  தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தையின் இறுதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், இதுகுறித்து பேசிய ரூவன் அஸார், பாகிஸ்தானியர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், அவர்களது செயல்பாடுகளை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் மீதான பாகிஸ்தானியர்களின் அணுகுமுறை, யூதவிரோத கருத்துகள் ஆகியவற்றை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்தது :

எத்தியோப்பியாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்தது. விபத்து நடந்த பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது ஆம்புலன்ஸ் சேவைகளோ இல்லாததால், அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Link
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 46 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau