Also Watch
Read this
By: Web Team

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். தனது மூன்றாவது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ள ஜாஸ்மின், இதன் மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஒன்பதாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.