Also Watch
Read this
By: Web Team

மெக்சிகோவில் டபுள் டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லகோமுல்கோ ((ATLACOMULCO)) நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து, தண்டவாளத்தை மெதுவாக கடந்து சென்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற ரயில் மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.