Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டத்தின் போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனிடையே போராட்டத்தின் போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.