Also Watch
Read this
By: Web Team

தாய்லாந்துடன் உடனடி போர்நிறுத்தத்திற்கு கம்போடியா அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அந்நாட்டின் தூதர் தெரிவித்துள்ளார்.
எல்லை தகராறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளும் ஜெட் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகள் என ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மோதல் காரணமாக தாய்லாந்தில் எல்லை பகுதியிலிருந்து சுமார் 1.3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ராணுவவீரர் ,பொதுமக்கள் என 15 பேர் உயிரிழந்த நிலையில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved