Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு மற்றும் நிர்வாக அமைப்பான நாசாவில் இருந்து 20 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் டிரம்பின் நிர்வாகம் எடுத்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த பணி நீக்கம் நடக்க உள்ளது.
20 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், நாசாவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 14 ஆயிரமாக குறைந்து விடும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 3 ஆயிரத்து 870 ஊழியர்கள் இன்னும் சில தினங்களில் பணி நீக்கம் செய்யப்டுவார்கள் என நாசாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.