news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய வம்சாவளி டாக்டர் அமெரிக்க எம்பி தேர்தலில் போட்டி
tv

Also Watch

இந்திய வம்சாவளி டாக்டர் அமெரிக்க எம்பி தேர்தலில் போட்டி

டாக்டர் அமித்ஷா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எம்பி தேர்தலில் போட்டி

குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக் கொண்ட டாக்டர் அமித்ஷா 

அமெரிக்காவின் அரிசோனா மாகாண எம்.பி. பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில், குஜராத் மாநிலத்தை பூர்வீமாகக் கொண்ட அமிஷ் ஷா, கட்சியின் வேட்பாளராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர் முன்னாள் கால்பந்து வீரர் ஜெய் பீலியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக நவாஸ் ஷெரீப் விருப்பம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் தனது 2-வது வீடு எனவும், தனது கட்சி வெற்றி பெற்றால், இந்த பகுதியின் முழுமையான வளர்ச்சியை தானே நேரில் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இவர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமராவார். மேலும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர்.

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்


மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அளவுக்கு பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 121 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.437 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.737 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை.

Related Link
ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதல்

ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரீதேவி கொல்லாபுரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved