Also Watch
Read this
By: Web Team

துருக்கியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சொகுசு கப்பல், பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மூழ்கி விபத்துக்குள்ளானது.
சோங்குல்டாக் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கப்பலில் இருந்த அதன் உரிமையாளர், கேப்டன் மற்றும் 2 பணியாளர்கள் கடலில் குதித்து உயிர் தப்பியதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.
2024 ம் ஆண்டு Med Yilmaz கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்து பின் இஸ்தான்புல்லில் இருந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கப்பல் மூழ்கியதற்கான தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved