Also Watch
Read this
By: Web Team

தாய்லாந்து-கம்போடியா இருநாடுகளும் உடனடி போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடந்த இந்த எல்லை மோதல்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாட்டு தலைவர்களுடனும் தனித்தனியாக பேசியதாகவும், தொடர்ச்சியான சண்டை அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.